மேட்டூர் அணை : 106 அடியை தாண்டிய நீர் மட்டம்

மேட்டூர்

மேட்டூர் அணையில் நீர் மட்டம் 106.22 அடியாக உயர்ந்ததை ஒட்டி அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ளது.

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் அங்குள்ள அணைகள் நிரம்பி விட்டன.    வெள்ள அபாயம் கருதி கபினி மற்றும் கிருஷ்ண ராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டது.   அதனால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்தது.

நேற்று காலையில் வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக இருந்த நீர் வரத்து அதன் பிறகு  ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக பிற்பகலில் அதிகரித்தது.   இன்று காலை சற்றே குறைந்து வினாடிக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கன அடி நீர் வந்துக் கொண்டுள்ளது.  அருவிகளில் வெள்ளப் பெருக்கு உள்ளதால் கடந்த 10 நாட்களாக அருவியில் குளிக்கவும் பரிசலுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் நீர் வரத்து அதிகரித்து நேற்று இரவு 7 மணிக்கு நீர்மட்டம் 100 அடியாக அதிகரித்தது.  நேற்றைய இரவு அணையின் நீர்மட்டம் 106.22 அடியாக உயர்ந்துள்ளது.    அணைக்கு நீர் வர்த்து  மேலும் அதிகரித்து வருகிறது.   அதை ஒட்டி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர் திறக்கப்பட உள்ளது.