மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டியது….வெள்ள அபாய எச்சரிக்கை

--

சேலம்:

மேட்டூர் அணை 4 ஆண்டுகளுக்கு பின்னர் முழு கொள்ளளவான 120 அடியை கடந்துவிட்டது. எனினும் அணைக்கு நீர்வரத்து அதிகரத்த வண்ணம் இருப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

39வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. இதனால் 16 கண் மதகு வழியாக உபரிநீர் திறக்கப்படுகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் விநாடிக்கு 81,038 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கேஆர்எஸ் அணையில் இருந்து 51,038 கனஅடியும், கபினி அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அடுத்து வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும், அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை, திருச்சி, சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 12 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.