மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்வு :  விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர்

மேட்டூர் அணை நீர் மட்டம் 75 அடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தற்போது கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.   இதனால் கபினி மற்றும் கே ஆர் எஸ் அணைகளில் நீர் நிரம்புவதால்  காவிரியில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.    இதை ஓட்டி ஒகேனக்கல் பகுதியில் நீர் வீழ்ச்சியில் குளிக்க வருவோருக்கு எச்சரிக்கை விடப்ப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களில் காவிரியில் வரும் நீர் அளவு அதிகரித்துள்ளது.   இதனால் மேட்டூர் அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.  இதுவரை 3 நாட்களில் சுமார் 10 முதல் 12 அடி வரை மேட்டூர் அணையில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.   இதில் நேற்று மட்டும் சுமார் 4 அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

தற்போது சுமார் 75 அடிக்கு மேல் மேட்டூர் அணையில் நீர் மட்டம் உள்ளது.   இந்த அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கன அடி நீர் திறக்கபடுகிறது.   அணையில் போதிய நீர் உள்ளதால் சம்பா உள்ளிட்ட பயிர் சாகுபடிக்கு தேவையான நீர் கிடக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.