308 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்த மேட்டூர் அணைநீர் மட்டம்…

சேலம்:

மேட்டூர் அணை நீர் மட்டம் 308 நாட்களுக்கு பிறகு 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது. தற்போதை யநிலையில், அணையில் இருந்து  10 ஆயிரம் கன‌அடி பாசனத்துக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம், கடந்த 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து 427 நாட்கள் 100 அடிக்கு குறையாமல் இருந்தது. அதையடுத்து, சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான்  100 அடிக்குக் குறையாமல்  அணையில் தண்ணீர் தேங்கியது.

இதையடுத்து,  மேட்டூர் அணையில் இருந்து,  8 ஆண்டுகளுக்குப் பிறகு குறிப்பிட்ட நாளில் (ஜூன் 12ந்தேதி) காவிரி பாசனத்திற்காக  தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணையை திறந்துவிட்டார்.

கடந்த ஜூன் 1ந்தேதி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,386 கனஅடியில் இருந்து 4,159 கனஅடியாக அதிகரித்தது. அப்போது,. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 101.05 அடியாகவும், நீர் இருப்பு 66.20 டி.எம்.சி.யாகவும் இந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

கடந்த ஜுன் 12ந்தேதி நிலவரப்படி,  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 புள்ளி 01 அடியாகவும், நீர் இருப்பு 64 புள்ளி 85 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 3000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில், இன்று (16.6.2020) நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,002 கன அடியில் இருந்து 2,210 கன அடியாக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் – 99.64 அடியாக உள்ளது., நீர் இருப்பு – 64.3 டிஎம்சி, நீர் வெளியேற்றம் – 10 ஆயிரம் கன‌அடி. 308 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிந்துள்ளது.