மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.21 அடி: அணைக்கு நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

மேட்டூர்:

ர்நாடக மாநிலத்தில் மழை அளவு குறைந்துள்ளதால், தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவை கர்நாடக அரசு குறைத்து உள்ளது. தற்போது வினாடிக்கு  75 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.

கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் கர்நாடகாவில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. இதன் காரணமாக அதிக அளவிலான  உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக 5 ஆண்டுகளுக்கு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. கடந்த 1 மாதத்திற்குள் மட்டும் மேட்டூர் அணை 3 முறை 120 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

ஏற்கனவே கடந்த (ஜூலை)  மாதம் 23-ந் தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.  அதைத்தொடர்ந்து 2வது முறையாக கடந்த (ஆகஸ்டு 13-ந் தேதி மேட்டூர் அணை120 அடியை தாண்டியது. தற்போதும் 120 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது.

கர்நாடகாவில் இருந்து வினாடிக்கு  1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக  மேட்டூர் அணையில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. தற்போது,  வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்போது. அணையின் நீர்மட்டம்  120.21 அடியாக உள்ளது.  அணையில் நீர்இருப்பு 93.80 டி.எம்.சி.யாக உள்ளது.

கார்ட்டூன் கேலரி