பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மெக்சிகோ மருத்துவர்: தீவிர சிகிச்சையில் அனுமதி

மெக்சிகோ: பைசர் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பின் மெக்சிகோ  மருத்துவர் ஐசியுவில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

மெக்சிகோ நாட்டில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பைசர் பயோ என் டெக்கின் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். அதன் பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வலிப்பு, சுவாச கோளாறு மற்றும் தோல் அரிப்பு காரணமாக அவர், நியூவோ லியோனில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இது குறித்து அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்து உள்ளதாவது:

மருத்துவருக்கு ஒவ்வாமை காரணமாக எதிர்விளைவுகள் ஏற்பட்டு உள்ளன.  தடுப்பூசி பயன்படுத்தப்பட்ட பின்னர் மூளையில் வீக்கம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி உள்ளது.