40 சதவீத சம்பளம் போதும்….வருங்கால மெக்சிகோ அதிபர் அதிரடி

 

மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ அதிபர் தேர்தலில் லோபஸ் ஆப்ரதோர் 53 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஒரு நூற்றாண்டாக மெக்சிகோவை ஆண்ட 2 கட்சிகளை அவர் தோற்கடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

அதிபராக பதவியேற்க உள்ள அவர் பல சிக்கன நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளார். மெக்சிகோ அதிபருக்கு மாதம் ரூ.10 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

தனக்கு ரூ.4 லட்சமாக சம்பளம் குறைக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம் முந்தைய அதிபர் பெற்ற சம்பளத்தில் 60 சதவீத்தை இவர் குறைத்துக் கொண்டுள்ளார். மீதமுள்ள 40 சதவீதத்தை மட்டுமே சம்பளமாக பெற்றுக் கொள்ள போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.