மெக்சிகோ:
மெக்சிகோவில் ஜலிஸ்கோ மாகாணத்தில் கொலிமா எரிமலை வெடித்து சிதறியது. அதன் காரணமாக அருகில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
lava
மெக்சிகோவில் உள்ள  கொலிமா கடந்த சில நாட்களாக சாம்பலை வெளியேற்றி வந்த நிலையில் தற்போது எரிமலை வெடித்து சிதறியது.  அதனால் அங்கிருந்து கடும்புகையும், சாம்பலும் வெளியேறி காற்றில் கலக்கிறது.
எரிமலையில் இருந்து வெளியே வரும்  லாவாக்களால் அந்த பகுதியில் பாதிப்பு ஏற்படும் என கருதியதால் அருகிலுள்ள கிராமங்களில் இருக்கும் மக்களை உடனே வெளியேற அரசு  அறிவுறுத்தியது.
அந்த மலையின் அடிவாரத்தில் உள்ள லா யெர்பாபுனே மற்றும் லா பெக்கரேரா ஆகிய கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் சுமார் 350 க்கு ம் மேற்பட்டேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். மீதமுள்ளவர்களையும் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
ஏற்கனவே  1913-ம் ஆண்டில் இந்த எரிமலை முதன் முறை யாக பெரிய அளவில் வெடித்தது குறிப்பிடத்தக்கது.