பிஃபா: முன்னாள் சாம்பியனான பிரேசிலை சமாளிக்குமா மெக்சிகோ ?

உலக கோப்பை கால்பந்து போட்டியில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இன்றைய போட்டியில் பிரேசிலை எதிர்த்து மெக்சிகோ மோதுகிறது. ரவுண்ட் – 16 போட்டியில் இரு அணிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க உள்ளன. ரஷ்யாவில் உள்ள சமாரா மைதானத்தில் சரியாக 7.30 மணியளவில் போட்டிகள் தொடங்க உள்ளன.
brazil
முன்னாள் சாம்பியனான பிரேசில் அணியை எதிர்கொள்வது மெக்சிகோவிற்கு கடினமாகவே இருக்கும். 5முறை உலக கோப்பையை கைப்பற்றிய பிரேசில் அணி உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதை தவிர உலக கோப்பைக்கான இறுதி போட்டியில் இரண்டு முறை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. நெய்மர் தலைமையில் நடைபெறும் போட்டியின் வெற்றியை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

லீக் சுற்றில் சுவிட்சர்லாந்துடன் விளையாடிய பிரேசில் முதல் போட்டியை டிராவில் முடித்தது. இதனால் ரசிகர்கள் சற்று களக்கம் அடைந்தனர். அதனை தொடர்ந்து கோஸ்டாரிகா மற்றும் செர்பியா அணிகளுடன் நடைபெற்ற போட்டிகளில் தலா இரண்டு கோல்கள் எடுத்து பிரேசில் வெற்றிப்பெற்றது. இதனை தொடர்ந்து 7 புள்ளிகளுடன் ரவுண்ட் 16 இடத்திற்கு பிரேசில் முன்னேறியது. லீக் சுற்றில் நெய்மர் எதிர்ப்பார்த்த அளவில் கோல் அடிக்காவிட்டாலும் சக வீரர்கள் அணிக்கு கைக்கொடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
mexican
உலக கோப்பையை ஒருமுறை கூட கைப்பற்றாத மெக்சிகோ அணி தரவரிசை பட்டியலில் 15வது இடத்தில் உள்ளது. இந்த அணி இரண்டு முறை மட்டுமே கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஒரு முறை கூட இறுதி போட்டிக்கு சென்றதில்லை. லீக் சுற்றில் உலக சாம்பியனான ஜெர்மனியுடன் மோதிய மெக்சிகோ 1-0 என்ற கோல் அடித்து த்ரில் வெற்றியை தந்தது. இதனை தொடர்ந்து 6 புள்ளிகளை பெற்ற மெக்சிகோ அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஜெர்மனி வெற்றியை தொடர்ந்து உலக கோப்பையை வெல்லும் முனைப்போது மெக்சிகோ வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நடைபெற உள்ள போட்டி இரு நாட்டு ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும்.

இதுவரை இரு அணிகளும் 40 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 23முறை பிரான்சும், 10 முறை மெக்சிகோவும் வெற்றிப்பெற்றுள்ளன. 7போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. உலக கோப்பையும் இரு அணிகளும் 4முறை மோதியுள்ளன. இதில் மெக்சிகோ 1 முறையும், பிரான்ஸ் 3 முறையும் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது.