Random image

புதிய அதிபரை தேர்வு செய்ய மெக்சிகோவில் வாக்குப்பதிவு

மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ அதிபர், நாடாளுமன்றம், 3,000 பிராந்திய பதவிகளுக்கான தேர்தல் இன்று தொடங்கியது. தற்போதைய அதிபரான பெனா நெய்டோவின் ஐஆர்பி கட்சி இத்தேர்தலில் தோல்வி அடையும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ன. .

ஐஆர்பி கட்சியில் இருந்து பிரிந்து தேசிய ரீஜெனரேசன் இயக்கம் தொடங்கிய லோபஸ் ஆப்ரதோர் வெற்றி பெறுவார் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவர் இடதுசாரி சிந்தனைகளை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஆண்ட கட்சியான தேசிய ஆக்‌ஷன் கட்சியின் சார்பில் ரிகார்டோ அனாயா போட்டியிடுகிறார்.

லோபஸ் ஆப்ரதோர் வெற்றி பெற்றால் மெக்சிகோவை ஒரு நூற்றாண்டாக ஆண்ட 2 கட்சிகளை வெளியேற்றியவர் என்ற பெருமைக்குறியவராவார். போதை மாபியா ஆதிக்கம் கொண்ட மெக்சிகோவில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்தது.