2018 ஆண்டின் உலக அழகியாக மெக்சிகோ நாட்டின் வனிசா போன்ஸ் டி லியோன் தேர்வு

மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 68வது உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இவருக்கு கடந்த வருடம்  உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் பட்டத்தை சூட்டினார்.

சீனாவின் சன்யா நகரில் 68வது உலக அழகிப்போட்டி நடந்தது  இதில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த வனசா பொன்ஸ் டிலியான் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 118 இளம்பெண்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டனர்.  இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந்த தமிழகத்தை சேர்ந்த மாணவி அனுகீர்த்தியும் இப்போட்டியில் கலந்துகொண்டார்.

வனிசா போன்ஸ் டி லியோன் உலக அழகி பட்டத்தை வென்ற முதல் மெக்ஸிகன் பெண் ஆவார். இவருக்கு வயது 26.

இவர் சர்வதேச வர்த்தகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.   பெண்கள் மறுவாழ்வு மையத்திற்கான குழு ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் தேசிய இளைஞர் நிறுவனம் ஒன்றில் பேச்சாளராகவும் மற்றும் மாடலிங், தொகுப்பாளர் பணியும் செய்து வருகிறார்

வனிசா போன்ஸ் டி லியோனியின் தலையில் கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் கிரீடத்தை அணிவித்தார். அப்போது, வனிசா இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்து கண் கலங்கியவாறு புன்னகை புரிந்தார்.

பிறகு அவர், “என்னால் இதை நம்ப முடியவில்லை. நிஜமாகவே நம்ப முடியவில்லை. நான் மிகவும் பெருமித உணர்வோடு இருக்கிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி” என்று தெரிவித்தார்.