சென்னை:
மிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு பணிகள் தொடங்கலாம் என்பதற்கான  அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
சமீபத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் தினக்கூலியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஒருநாள் ஊதியமான ரூ.229-ஐ 256 ஆக தமிழக அரசு உயர்த்தியது. இந்த ஊதிய உயர்வு  ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில்,   தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு தொடங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் இந்நிலையில், தமிழகத்தில் எந்தெந்த பணிகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது.

குடிநீர் விநியோகம், தூய்மைப் பணிகள், மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம்,

மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் கட்டுமானம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளலாம்,
கிராமப்புற பகுதிகளில் நீர்நிலைகளை தூர்வாருதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம்,
நீர்ப்பாசனம், அணை பாதுகாப்பு, சாலை, பாலங்கள், செங்கல் சூளை பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர கண்ணாடி, டயர், மிகப்பெரிய காகித ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம்