எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: சிறப்பு நாணயம் வெளியிட கோரி, பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

--

சென்னை,

எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறப்பு நாணயம் வெளியிட கோரி தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

எம்ஜிஆருக்கு சிறப்பு நாணயம் வெளியிடக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக கட்சியை உருவாக்கியவருமான  எம்ஜிஆரின்  நூற்றாண்டு விழா வரும் 17-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி அவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வரும் 17ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி சிறப்பு நாணயம்  மற்றும் சிறப்பு ,  சிறப்பு அஞ்சல்தலை வெளியிட வேண்டும். அதற்கான  அறிவிப்பை பிரதமர் விரைவில் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியாவின் மிக உயரிய விருதான, பாரத ரத்னா விருது வழங்கி எம்ஜிஆருக்கு ஏற்கனவே வழங்கி கவுரவம் வழங்கி உள்ளது இந்திய அரசு.