மறைந்த எம்.ஜி.ஆர். சிறுவயதில் வாழ்ந்த வீடு பாலக்காடு மாவட்டம் வடவனூர் சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. தற்போது அங்கு கேரள அரசின் அங்கன்வாடி ஒன்று இயங்கி வருகிறது.

இன்று இங்கு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அமைச்சர்கள், பதவிகளில் இருப்பவர்கள் தங்களது பதவி சுகத்தை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு ஆட்களை திரட்டி, போதாகுறைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசுப்பள்ளி மாணவர்களை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க செய்து ஒருவழியாக விழாவை நடத்தி முடித்து ஆசுவாசம் அடைகின்றனர்.

அவரது பூர்வீகம் கூட இவர்களுக்கு நினைவில் இல்லை. கேரளாவில் எம்.ஜி.ஆர் பிறந்து வளர்ந்த பூர்வீக வீடு சிதிலம் அடைந்த நிலையில் உள்ளது என்பது கோடி உறுப்பினர்களில் ஒருத்தருக்கு கூடவா தெரியாது.

அதனை புணரமைப்பு செய்து, சீர்படுத்தி அங்கு ஒரு சிலைவைத்து மரியாதை செய்திருக்க வேண்டாமா? இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சென்னையில் இருக்கும் எம்.ஜி.ஆர் சமாதியை கூட சுத்தம் செய்யவில்லை. மலர் அலங்காரமோ மாலைகளோ கூட அணிவிக்கவில்லை. மக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு பதாகைகள் கூட இல்லை.

ஆனால் அவர் பெயரை சொல்லி பிழைப்புவாதிகளுக்கு ஊரெங்கும் வழிநெடுக பதாகைகள். எம்.ஜி.ஆரின் புகழை எடுத்து சொல்லும் நோக்கமின்றி அவர் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதற்காக நூற்றாண்டு விழா நடக்கிக் கொண்டு இருக்கின்றனர்கே.

.எஸ்.இராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு