சென்னை,

எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

கடந்த 7ந்தேதி எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கீதாலட்சுமிக்கு நேரில் ஆஜராக வருமான வரித்துறையினர்  சம்மன் அனுப்பியது.

ஆனால், கீதாலட்சுமி வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகாமல், சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால், ஐகோர்ட்டு அவரது கோரிக்கையை நிராகரித்து, வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக அறிவுறுத்தியது.

அதைத்தொடர்ந்து வருமானவரித்துறை கீதாலட்சுமிக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக தவறினால்  வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை கீதாலட்சுமி நுங்கம் பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார்.