Random image

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர்: யார் இந்த சுதா சேஷையன்?

சென்னை:

மிழகத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக பிரபல மருத்துவர் சுதா சேஷையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவின்போது…பரபரப்பாக பேசப்பட்ட மருத்துவர் சுதா சேஷையன்.

இவர் சென்னை மருத்துவக் கல்லூரி உடற்கூறு இயல் துறையின் இயக்குராக இருந்து வருகிறார். இவர்தான இறந்த ஜெயலலிதாவின் அழகான கன்னத்தில் 4துளைகள் போட்டு, அவரது உடலை பதப்படுத்தியதாக கூறப்பட்டது. ஆனால், அவர் அதற்கு வேறு விளக்கம் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜெ. மறைந்தபோது அவரது உடலின் பல பாகங்கள் அகற்றப்பட்டு உள்ளதாக புகார் கூறப்பட்டு வந்தது. மேலும் அவரது கண்ணத்தில் துளை போட்டதும் சர்ச்சைகளை  கிளப்பி இருந்தது.

சுதா சேஷையன்

அதைத்தொடர்ந்து  சென்னையில் அப்பல்லோ மருத்துவர்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் உள்ளிட்டோர் கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஜெ. கண்ணத்தில் உள்ள 4 ஓட்டைகளுக்கான காரணம் என்ன என்பதை சுதா சேஷையன் விவரித்தார்.

மேலும்,  ஜெயலலிதா பெரும் தலைவர். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும், பல லட்சம் மக்களும் வந்து அஞ்சலி செலுத்துவார்கள். அப்போது யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக  அவரது உடல் பதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஜெயலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5தேதி இரவு இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அன்று இரவு தனக்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சரிடம் இருந்துஅழைப்பு வந்தாகவும் அதைத்தொடர்ந்து,  சென்னை மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த குழுவினரோடு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, நள்ளிரவு சுமார் 12.20 மணிக்கு அவரது உடல் எம்பார்மிங் முறையில் பதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது ஜெவின் உடலில் பார்மலின் திரவத்தை செலுத்துவதற்காக  ஜெயலலிதா உடலின் வலது காலில் சிறிய குழாய் செருகி அதன் வழியாக திரவத்தைச் செலுத்தினோம். சுமார் 15 நிமிஷங்களில் திரவத்தைச் செலுத்தும் பணி நிறைவடைந்தது. தாங்கள் பார்க்கும்போது அவரது கண்ணத்தில் துளைகள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும்,  ஜெ. உடலை பதப்படுத்துவதற்கு முன்பு ஆராய்ந்தபோது, அவரது உதடு மற்றும், மூக்கில் திரவ துளிகள் வெளியேறியது தெரிய வந்ததும் என்றும்,  நீண்ட நாட்கள் அவர்  சிகிச்சைஅவரது உடலில் சிறிய சிறிய துளைகள் காணப்பட்டன. அதுதான் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது எடுத்த போட்டோவில் காணப்பட்டது என்று விளக்கினார்.

முக்கிய நபர்கள் இறக்கும்போது,  அவர்களது உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கும் போது உடல் கெட்டுப் போகாமல் இருக்கும் வகையிலும், துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கும் உடலைப் பதப்படுத்துவது வழக்கம். எனவேதான் ஜெயலலிதாவுக்கும் உடல் பதப்படுத்தப்பட்ட தாகவும் தெரிவித்தார். இதுபோல ஏற்கனவே  மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்  உடலுக்கும் பதப்படுத்தல் நடந்தது என்பதையும் தெளிவு படுத்தினார்.

இவர்தான் தற்போது எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.