தேனி.

எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக கோட்டையாக கருதப்படும், தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட  ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் அண்ணன் தம்பிக்கள் களமிறங்கி உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஜன் – அவரது  சொந்த தம்பி லோகிராஜன்

திமுக சார்பாக மகாராஜன் போட்டியிடுவார் என அறிவிக்கபட்டு இருந்த நிலையில் மகாராஜனின் சொந்த தம்பி லோகிராஜன் அதிமுக சார்பாக களமிறக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர்கள் குடும்பத்துக்குள்ளும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

1977ம் ஆண்டு முதல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக திகழ்ந்து வரும் ஆண்டிப்பட்டி தொகுதியில், 1984ம் ஆண்டு அதிமுக தலைவர் எம்ஜிஆர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக ஆண்டிப்பட்டி தொகுதி பட்டி தொட்டிகளில் எல்லாம்  புகழ் பெற்றது.

ஆனால், 1989ம் ஆண்டு திமுக போட்டியிட்டு வெற்றி பெற்றது. அப்போது திமுக ஆட்சி 2 ஆண்டுகளில் கலைக்கப்பட்டு விட்டது. பின்னர் 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவே வெற்றி பெற்றது. பின்னர்  1996ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. பின்னர் 2002, 2006 தேர்தலின்போது ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் நடை பெற்ற 2011 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தங்கத்தமிழ் செல்வன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  ஆனால், இவர் டிடிவிக்கு ஆதரவாக மாறியதால், தகுதிநீக்கம் செய்யப்பட்டு, தற்போது அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தொகுதியில் அமமுக சார்பில் தங்கத்தமிழ் செல்வன் மீண்டும் களமிக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், திமுக சார்பாக மகாராஜன் போட்டியிடுவார் என அறிவிக்கபட்டு உள்ளது. அவரை எதிர்த்து, அவரது  சொந்த தம்பி லோகிராஜன் அதிமுக சார்பாக களமிறக்கப்பட்டுள்ளார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.