எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: “அண்ணாயிசம்” கொள்கை விளக்க நூல் வெளியீடு

சென்னை:

மிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் “அண்ணாயிசம்” கொள்கை விளக்க நூல் நாளை மறுநாள் (05.08.201 – சனிக்கிழமை) வெளியிடப்படுகிறது.

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனித நேய இலவச கல்வி அறக்கட்டளை, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை “வேர்களுக்கு வெளிச்சம்” என்ற நிகழ்ச்சியாக நடத்துகிறது.

வரும் சனிக்கிழமை 05.08.2017 அன்று  சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் காலை 9 மணி முதல்  இரவு 9 மணி வரை  இந் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாதஸ்வர இசையுடன் நிகழ்ச்சி துவங்குகிறது.  தொடர்ந்து கலைமாமணி சுப்பு ஆறுமுகம் குழுவினர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை வில்லிசையில்  வழங்குகிறார்கள்.

தொடர்ந்து பொதுநலச் சங்கத்தினரை பாராட்டி கவுரவிக்கும்  நிகழ்ச்சி நடைபெறும்.  கடந்த 2015 டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது மக்களக்கு  மக்களுக்கு உதவி புரிந்தவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

பிற்பகலில்லபிரபல மெல்லிசைக் குழுவான லஷ்மண் ஸ்ருதியின் மெல்லிசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் எம்.ஜி.ஆர் படப்பாடல்கள் மட்டும் இசைக்கப்படும்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எம்.ஜி.ஆரின் “அண்ணாயிசம்” கொள்கை விளக்க நூல் வெளியிடப்படுகிறது.

நிகழ்ச்சி குறித்து விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாவது:

“”எம்.ஜி.ஆருடன் பழகிய, பணி புரிந்த அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், அக்கலத்திய பத்திரிகையாளர்கள், எம்.ஜி.ஆரின் உடல் நலம் பேணிய மருத்துவர்கள், எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தில் பணிபுரி்ந்த ஊழியர்கள், திரைத்துரையில்  அவருடன் பழகியவர்கள்  அவரது உடை அலங்கார நிபுணர்கள், அவருக்காக தொப்பி, காலணிகள் கண்ணாடிகள் தொடர்ந்து தயார் செய்து அளித்தவர்களது குடும்பத்தினர் ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்படுவார்கள்.

1972 –ல் எம்.ஜி.ஆர். அவர்கள், தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு கட்சி துவங்கியபோது அவருக்காக உயிர் நீத்த தொண்டர்களின் குடும்பத்தினர், கட்சிக்காகத் தொடர்ந்து பாடுபட்ட தியாகிகள், இப்படி 1972 முதல் 1987 வரை அ.தி.மு.க.வின் உயிர்நாடியாக விளங்கிய பல்வேறு தரப்பினர் கவுரவிக்கப்படுவார்கள்.

இந்த விழாவின் பிரதான நோக்கமே, எம்.ஜி.ஆரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக – வேர்களாக இருந்தவர்களினஅ நினைவுகளை தக்க புகைப்பட ஆதாரங்களுடன் ஒழுங்குபடித்தி “வேர்களுக்கு வெளிச்சம்” என்ற தலைப்பில் ஆவண ஒளிப்படமாக தயார் செய்யும் பணி இந்த விழாவில் துவங்குகிறது” என்று தெரிவித்தனர்.

இந்த விழாவை “இதயக்கனி” மாத இதழ் இணைந்து நடத்துகிறது.

இந்த  விழாவுக்காக அழைப்பிதழ் அடிக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவும் இல்லை.  எம்.ஜி.ஆர். அபிமானிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் ஒன்றுகூடும் விழாவாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.