எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணி மகன் எம்.ஜி.சி.சந்திரன் கொரோனாவுக்கு பலி….

சென்னை: எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.ஜி.சி.சந்திரன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி. இவர் 1986-ம் ஆண்டு மறைந்தார். இவர் நடிகராகவும், படத்தயாரிப்பாளராகவும் இருந்தார். இவரது மகன்களில் ஒருவர்  எம்.ஜி.சி.சந்திரன் (வயது 75). இவர் மனைவி சித்ராவுடன் சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் வசித்து வந்தார்.

இவருக்கு கொரோனாதொற்று உறுதியான நிலையில், கடந்த திங்கட்கிழமை  சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இவர்  கடந்த 2017 ஆண்டு மார்ச் மாதம் ‘அண்ணா எம்ஜிஆர் அம்மா திமுக’ என்கிற கட்சியை ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.