நெட்டிசன்:

இதயக்கனி விஜயன் அவர்களின் முகநூல் பதிவு:

டந்த 20-02-2017 அன்று,  நண்பர்களுடன்  சென்னை கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடம், செல்வி ஜெயலலிதா நினைவிடங்களுக்குச் சென்றோம்.

ஜெயலலிதா மறைந்து, எப்போது எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்திற்குள் அவருக்கு புதிதாக நினைவிடம் உருவாக்கப்பட்டதோ, அப்போது முதலே எம்.ஜி.ஆர் நினைவிடம் அடைபட்டுவிட்டது.

முன்பு நடிகை திருமதி.லதாவை அங்கு அழைத்து சென்ற சமையத்தில் எங்களுக்காக எம்.ஜி.ஆர் நினைவிடம் திறந்து விடப்பட்டது. மற்ற நேரங்களில், நினைவிட பீடத்திலிருந்து, சுமார் 25-அடி தூரத்திலிருந்து தான் எம்.ஜி.ஆர் நினைவிடத்தை தரிசிக்க முடியும்.

இப்போது சென்ற போது, ஒரு நாய் சுகமாக பீடம் அருகே தூங்கிக் கொண்டிருந்தது. நினைவிடத்தின் பராமரிப்பில்லாத இந்த நிலை பற்றி அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலரிடம் சொல்லிப் பார்த்தேன். ‘அவரிடம் சொல்லுங்கள்’, ‘இவரிடம் சொல்லுங்கள்’ என்றார்களே தவிர, முறையான பதில் இல்லை.

இது பற்றி யாருடைய கவனத்திற்கு கொண்டு சென்றால் எடுபடும் என்பதற்கு நமக்கு சரியான விடை தெரியவில்லை.