லெபனான் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது பேமஸ் கண்ணாடியை ஏலம் விட்ட நடிகை மியா கலிஃபா..!

ஆபாச திரைப்படங்களின் மூலம் ஊடகங்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர்களின் முக்கியமானவர் மியா கலிஃபா.

அதிகம் தேடப்பட்ட இரண்டாவது இடத்தைப் பிடித்த 26 வயதான பெண்ணான மியா கலிஃபா லெபனானில் பிறந்து அமெரிக்கராக இருந்து வருபவர் .

கடந்த வாரம் பெய்ரூட் நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தனது சமூக ஊடக பலத்தை பயன்படுத்தியுள்ளார்.

லெபனான் செஞ்சிலுவை சங்கத்திற்கு பயனளிப்பதற்காக மியா கலிஃபா தனது கண்ணாடியை “பிரபலமற்ற” கண்ணாடிகள் என்று குறிப்பிட்டு eBay தளத்தில் ஏலத்திற்கு முன்வைத்துள்ளார். இதுவரை 189 பேர் ஏலம் கேட்டதை அடுத்து இப்போது அந்த கண்ணடியின் மதிப்பு 100,000 டாலராக அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 75 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலம் முடிய இன்றுடன் இன்னும் நான்கு நாட்கள் உள்ளன. இந்த கண்ணாடியை, அவர் நிறைய ஆபாச படங்களில் அணிந்து நடித்துள்ளார்.

வெற்றியாளர் விரும்பினால் கண்ணாடிகளில் கையெழுத்திடுவதாகவும், அவற்றை அனுப்புவதற்கு முன்பு ஒரு போலராய்டு போட்டோ எடுத்துக் அனுப்புவதாகவும் மியா கலிஃபா உறுதியளித்துள்ளார். “லெபனீஸ் மக்களுக்காக அதிக அளவிலான பணத்தைத் திரட்டுவோம்” என்று அவர் ebay தளத்தில் தெரிவித்துள்ளார்.