மைக்கேல் ஜாக்சன் தந்தை மரணம்

வாஷிங்டன்

பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தந்தை ஜோ ஜாக்சன் மரணம் அடைந்தார்.

                                  ஜோ ஜாக்சன்                                                    மைக்கேல் ஜாக்சன்

பிரபல பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.   அவருடைய குடும்பத்தில் அனைவருமே இசை பயின்றவர்கள்.  மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஜாக்கி ஜாக்சன், சகோதரி ஜேனட் ஜாக்சன் உள்ளிட்ட 5 குடும்ப உறுப்பினர்கள் இசையில் புகழ் பெற்றவர்கள் ஆவார்கள்.   இவர்களை இசை உலகில் ஜாக்சன் 5 என அழைப்பது வழக்கம்

இந்த புகழ்பெற்ற பாடகர்களின் தந்தை ஜோ ஜாக்சன்.  தற்போது 89 வயதாகும் இவர் கணையப் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார்.  தற்போது அது தீவிரமாகவே மரணம் அடைந்துள்ளார்.   மைக்கேல் ஜாக்சனின் ஒன்பதாவது நினைவு தினம் முடிந்த இரு தினங்களில் இவர் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

ஜோ ஜாக்சனின் மகளும் மறைந்த மைக்கேல் ஜாக்சனின் சகோதரியுமான லா டோயா ஜாக்சன், “எங்கள் தந்தை ஜோ ஜாக்சன் கடந்த சில நாட்களாகவே கணையப் புற்று நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்” என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.