லாஸ் ஏஞ்சல்ஸ்:

மறைந்த பிறகும் அதிக அளவில் சம்பாதிக்கும் பிரபலங்கள் வரிசையில் தொடர்ந்து 5வது முறையாக மைக்கேல் ஜாக்சன் முன்னிலை வகிக்கிறார்.

அமெரிக்காவின் பிரபல, போர்ப்ஸ் பத்திரிகையில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பட்டியலில்,‘‘ கிங் ஆப் பாப்’ என, உலகம் முழுவதும் பாராட்டப்படும் மைக்கேல் ஜாக்சன், இந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த பிரபலமாக விளங்குகிறார்’’ என, தெரிவித்துள்ளது. இவர் 75 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளார்.

இவரை போன்று இதர பாடகர்களான எல்விஸ் ப்ரெஸ்லே மற்றும் பாப் மெர்லே ஆகியோர் இறந்து 40 ஆண்டுகளுக்கு பின்னரும் இந்த பட்டியலில் முதல் 5 இடத்தில் இடம்பெற்றுள்ளனர். ப்ரெஸ்லே 35 மில்லியன் டாலருடம், மெர்லே 23 மில்லியன் டாலரும் வருவாய் ஈட்டியுள்ளனர். மேஜிக் நிபுணர் அர்னால்டு பால்மர் 49 மில்லியன் டாலரும், கார்டூனிஸ்ட் சார்லஸ் ஸ்கூல்ஸ் 38 மில்லியன் டாலரும் வருவாய் ஈட்டி இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் டாம்பெட்டி 20 மில்லியன் டாலர், பிரின்ஸ் 18 மில்லியன் டாலர், ஜான் லெனன் 12 மில்லியன் டாலர், டேவிட் போவ் 9.5 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 20ம் நூற்றாண்டில் விஞ்ஞாணியான ஆல்பர்ட் இன்ஸ்டன் இந்த பட்டியலில் 10 மில்லியன் டாலருடன் 10ம் இடத்தை பிடித்துள்ளார்.