ஊழியர்களை கண்காணிக்க உடலில் மைக்ரோசிப்!! அமெரிக்கா நிறுவனம் புது திட்டம்

நியூயார்க்:

அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களை கண்காணிக்க உடலில் மைக்ரோசிப்பை செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை கண்காணிக்கவும், அவர்களின் வசதிக்காகவும், அவர்களுடைய உடலில் இந்த மைக்ரோசிப் செலுத்த திட்டமிட்டுள்ளது . ஊழியர்களின் விருப்பத்துடன் இது செலுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் தேவையை நிறைவேற்றிகொள்ளவே இந்த மைக்ரோசிப்களை உடலில் பதியப்படுகிறது. இந்த மைக்ரோசிப் மூலம் ஊழியர்கள் அலுவலகத்திற்குள் நுழைய தங்கள் கைகளை ஸ்வைப் செய்தாலே போதுமானது. மேலும் கம்யூட்டரை லாகின் செய்யவும், கதவுகளை திறக்கவும், அலுவலகம் சார்ந்த பணிகளுக்கு பணம் செலுத்தவும் இது பயன்படும்.

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் இந்த மைக்ரோசிப்களை உடலில் செலுத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். வரும் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து இந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘மைக்ரோசிப்பை ஊழியர்களின் உடலில் செலுத்தப்படும் போது ஒரு ஊசி போல உணர்வினை மட்டுமே வெளிப்படுத்தும். ஊழியர்களைக் கண்காணிப்பதற்காக இது பயன்படுத்தபடமாட்டாது’’ என்றார்.

 

You may have missed