நியூயார்க்

மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவன தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா குடியுரிமை சட்டத்துக்கு வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியக் குடியுரிமை சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி 2014க்கு முன்பு வரை வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடி புகுந்த வெளிநாட்டவர்களில் இஸ்லாமியர் தவிர மற்ற மதத்தினருக்குக் குடியுரிமை வழங்க வழி செய்யப்பட்டுள்ளது,   இதையொட்டி நாடெங்கும் கடும்  போராட்டம் நடைபெற்று வருகிறது.

சர்வதேச அளவில் இயங்கி வரும் நிறுவனங்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் ஒன்றாகும்.  இந்த இந்தியக் கிளைக்குத் தலைமை நிர்வாக அதிகாரியாக சத்யா நாதெள்ளா பணி புரிந்து வருகிறார்.   இவரது பூர்வீகம் இந்தியாவில் உள்ள ஐதராபாத் நகரமாகும்.  இவர் நியூயார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.

அந்த கூட்டத்தில் அவர், “அனைத்து நாடுகளும் அதன் எல்லைகளை வலியுறுத்தி தேசியப் பாதுகாப்பை உறுதி செய்யும்.   இதன் அடிப்படையில் குடியேற்றக் கொள்கைகளையும் அந்தந்த நாடுகள் உருவாக்கும்.   இது ஜனநாயக முறைப்படி அவசியமான ஒன்று என்பதில் ஐயமில்லை.

இந்திய பாரம்பரியத்தில் பலவித கலாச்சாரங்களுக்கிடையில் நான் வளர்ந்துள்ளேன். அத்துடன் நான் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்துள்ளவன்.  இவ்வாறு குடி பெயர்ந்தவர் ஒரு வளமான தொடக்கத்தை உருவாக்க வேண்டும்.  அதன்படி  இந்தியாவில் இயங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை இந்தியர் மட்டுமின்றி இந்தியாவுக்குக் குடி பெயர்ந்தவர்களும் நடத்த வேண்டும்.

தற்போது இந்தியாவில் நடப்பது குறித்து எனக்கு மிகவும் வருத்தமாக உள்ள்து.   இந்த நிலை மிகவும் மோசமானது.   குடியுரிமை சட்டம் என்பது நாட்டுக்குள் குடியேறியவர்களின் உரிமையை மதத்தைக் காரணம் காட்டி பறிப்பதாக உள்ளது.   நான் இன்ஃபோசிஸ் போன்ற ஒரு மாபெரு நிறுவனத்துக்கு வங்க தேசத்தில் இருந்து குடி பெயர்ந்த ஒருவர் தலைமை நிர்வாக அதிகாரியாக வர வேண்டும் என நான் விரும்புகிறேன்” என உரையாற்றி உள்ளார்.