அமெரிக்க இடைக்கால தேர்தலில் பெரும்பான்மையை இழந்த டிரம்ப் கட்சி!
அமெரிக்காவில் பிரதிநிதிக்களுக்கான இடைக்கால தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையை கைப்பற்றிய நிலையில், ட்ரம்பின் குடியரசுக் கட்சி சரிவை சந்தித்துள்ளது. எனினும் செனட் சபையை குடியரசுக் கட்சி தக்க வைத்துள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடத்து முடிந்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள செனட் சபையின் 100 உறுப்பினர்களுக்கும், பிரதிநிதிகள் சபையின் 435 உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. 435 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் இந்த தேர்தல் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதனுடன் சேர்த்து 36 மாநில ஆளுநர் பதவிக்கான தேர்தலும் நடந்தது.
தேர்தல் முடிந்தவுடன் உடனடியாக ஓட்டுக்கள் எண்ணும் பணி நடந்தது. அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தல்களில், இம்முறைதான் அதிகளவு வாக்குப்பதிவு நடந்திருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதில், சென்ட் சபையை குடியரசு கட்சியினர் தக்க வைத்து கொண்டனர். ஆனால், ஜனநாயக கட்சிகள் பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது. மேலும், குடியரசு கட்சி வசம் இருந்த 10 உறுப்பினர் இடங்கள் ஜனநாயக கட்சி வசம் வந்தது.
இந்நிலையில், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதையை எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரம்படி, ஜன நாயக கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதுடன் வெர்ஜினியா, புளோரிடா போன்ற மாகணங்களில் வெற்றியும் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் டிரம்ப் அரசால் சமீப காலமாக நடந்த இனவெறி, குடியுரிமை மற்றும் கலாச்சாரப் பிரச்சனைகள் காரணமாக ட்ரம்பின் மீதும், அவரது குடியரசுக் கட்சி மீதும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதிநிதிகளுக்கான இடைத் தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக் கட்சி சிறிய சரிவைச் சந்தித்துள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.