வாஷிங்டன்:

சீனாவை புரட்டியெடுத்து வரும் கொரோனா வைரஸ் (கோவிட்19), தற்போது உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. தற்போது  மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து வரும் கொரோனா  வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் 2வது நபர் பலியாகி உள்ளது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவில் 3,044 பேர் பலியான நிலையில், 80,026 பேர் நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.

அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்நாடுகளில் இதுவரை 1143 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா தாக்குதல் விவரம்:

அமெரிக்காவிலும் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு  இதுவரை 2 பேர் பலியாகி இருப்பதாக அந்நாடு உறுதி செய்துள்ளது. மேலும் 86 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி உள்ளது.

தென்கொரியாவில் 4212 பேர் நோய் தாக்குதலுக்கு ஆளான நிலையில், 26 பேர் பலியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இத்தாலி 1,694 பேர் கொரோனா தாக்குதலில் சிக்கி உள்ள நிலையில், 34 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான்  978 பேருக்கு நோய் தாக்குதல் பலியானோர் எண்ணிக்கை 54
ஜப்பான் 256
பிரான்ஸ் 130
ஜெர்மனி 130
சிங்கப்பூர் 106
ஹாங்காங் 98
ஸ்பெயின் 84
பக்ரைன் 47
குவைத் 45
தாய்லாந்து 42 Thailand
தைவான் 40 Taiwan
இங்கிலாந்து 36
ஆஸ்திரேலியா 29
மலேசியா 29
சுவிட்சர்லாந்து 27
கனடா 24
ஐக்கிய அரபு எபிரகம் 21
நார்வே 19
ஈராக் 19
வியட்நாம் 16
ஸ்வீடன் 14
ஆஸ்டிரியா 14
இஸ்ரேன், 10

நெதர்லாந்து 10

கத்தார்  6

எகிப்து 2

ஆப்கானிஸ்தான் 1 உள்பட பல நாடுகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.