download (1)
நள்ளிரவில் திடுமென வியர்க்க விறுவிறுக்க எழுந்து, “பேய் என்னை அமுக்கி கொல்லப் பார்த்தது” என்று பீதியுடன் சொல்பவரை நம்மில் பலர் பார்த்திருக்கலாம்.
ஏன்.. நமக்கே கூட அந்த மாதிரியான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.
உண்மையில் பேய்தான் அமுக்கிக் கொல்லப்பார்க்கிறதா?
பேயும் இல்லை, பிசாசும் இல்லை. விஷயம் ரொம்ப சிம்ப்பிள்.
உறக்கத்தில் இரண்டு நிலைகள் இருக்கின்றன.  ஒன்று விரைவான கண் இயக்கம். இதை ஆங்கிலத்தில்  RAPID EYE MOVEMENT(REM) என்பார்கள்.
மற்றொன்று  மெதுவான கண் இயக்கம்.  NonREM (NREM).
நீங்கள்  உறங்க தொடங்கியதும் உங்களுக்கு முதலில் நிகழுவது மெதுவான கண் உறக்கம். அடுத்து விரைவான கண் உறக்கம் வரும்.
 
இப்படி இரண்டும் மாறிமாறி உறக்கத்தில்  நிகழும். 90 நிமிடங்களுக்கு ஒரு முறை இது மாறிக்கொண்டே இருக்கக்கூடும்.
மெதுவான கண் உறக்கம் மாறும் கடைசி கட்டத்திலேயே உங்கள் உடல் முழுமையா உறக்கத்தின் கட்டுப்பாட்டில் வநதுவிடும்.
இது முடிந்து விரைவான கண் உறக்க நிலை ஏற்படும்போது உங்கள் கண்கள் கொஞ்சம் இயங்கும். கனவுகளும் தோன்றும்.  ஆனால் உங்கள் உடல் தளர்ச்சி நிலையிலேயே இருக்கும்.
இந்த நிலை முடிவதற்குள் உங்களுக்கு சுயநினைவு தோன்றினாலும், உங்கள் உடலை அசைக்க முடியாது. அதாவது மூளை இயங்கும், அதன் கட்டளையை ஏற்று  உடல் இயங்காது.
அப்போதுதான், “அய்யய்யோ, நான் கையை காலை அசைக்க முயற்சித்தும் முடியவில்லையே” என்கிற பயம் தோன்றும்.
ஒரு கட்டத்தில் மிகுந்த பிரயாசைப்பட்டு, அல்லது முழு விழிப்பு வந்து எழுந்து, “ அய்யோ.. பேய் அமுக்கிருச்சி” என்று பயந்துபோய் எழுவீர்கள்.
மற்றபடி பேய் பிசாசு என்று ஏதுமில்லை!