நள்ளிரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது விபரீதம்: காதலியை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்த காதலன்

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே காதலியின் பிறந்தநாளை  நள்ளிரவில் கொண்டாடியபோது  ஏற்பட்ட வாக்குவாதத்தில் காதலியை துப்பாக்கி சுட்டுக்கொன்றார் காதலன். அதைத்தொடர்ந்து தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த பரபரப்பு சம்பவம் விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தில் நடைபெற்றுள்ளது.

காதலர்கள் கார்த்திக் – சரஸ்வதி

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அடுத்த அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவல் சரஸ்வதி. இவர் மருத்துவக்கல்வி படித்து வருவதாக கூறப்படுகிறது. இவரது காதலன் கார்த்திக் வேலன். இவர் வேலூர்  பட்டாலியன் பிரிவில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் இடையே 4 ஆண்டுகளாக காதல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சரஸ்வதியின் பிறந்தநாளையொட்டி, நள்ளிரவு  12 மணி அளவில் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட விரும்பிய கார்த்திக், சரஸ்வதியின்  வீடு உள்ள அன்னியூருக்கு சென்றுள்ளார். அங்கு நள்ளிரவில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து காதலர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் தன்னிடம் இருந்து  துப்பாக்கியால், காதலி சரஸ்வதியை சுட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கார்த்திக் வேலனும் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு வெளியே வந்த சரஸ்வதி குடும்பத்தினர் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும்  ஏற்படுத்தியது.

இதுகுறித்து உடடினயாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  அவர்களின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர்,  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர்.

கார்த்திக் வேலனுடனான காதல  தவிர்க்க சரஸ்வதி முயற்சித்து வந்ததாகவும், இதன் காரணமாக ஏற்பட்ட மோதல் காரணமாகவே கார்த்திக் தனது காதலியையும் சுட்டுக்கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.