அக்டோபர் 11-ம் தேதி வெளியாகிறது சுரேஷ் காமாட்சியின் ‘மிக மிக அவசரம்’ ….!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘மிக மிக அவசரம்’.. இத்திரைப்படம் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீப்ரியங்கா, ஹரிஷ், முத்துராமன், ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப் படத்தின் கதை – வசனத்தை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முன்னதாக, இந்தப் படத்தை பல்வேறு பிரபலங்களுக்குத் திரையிட்டுக் காட்டியுள்ளார் சுரேஷ் காமாட்சி. அனைவருமே படக்குழுவினரை வாழ்த்தி பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .