டில்லி

ரடங்கு காரணமாக வெளிமாநில தொழிலாளர்களில் 96% பேருக்கு, அரசு வழங்கும் ரேஷன் பொருட்கள் மற்றும் 90% பேருக்கு ஊதியம் கிடைக்கவில்லை என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது

கொரோனா அதிகரிப்பு காரணமாகக் கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அதையொட்டி பல வெளி மாநில வாழ் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் திண்டாடி வந்தனர்.  இவர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் உணவு மற்றும் உறைவிடம் உள்ளிட்டவை அளிக்க உள்ளதாகவும் மேலும் ஒவ்வொரு குடும்பத்துக்கு ரொக்க பண உதவி,, ரேஷன் பொருட்கள் உள்ளிடவை வழங்க உள்ளதாகவும் அரசு அறிவித்தது.

அத்துடன் வெளி மாநில தொழிலாளர்களுக்கு  ஊரடங்கு நேரத்தில் முழு ஊதியம் வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த உதவிகள் வெளிமாநில தொழிலாளர்களுக்குப் போய்ச் சேரவில்லை எனப் பலரும் புகார் எழுப்பினர்.  இதை ஒட்டி புலம்பெயர் தொழிலாளர்கள் நல வலையமைப்பு ஒரு கணக்கெடுப்பை நிகழ்த்தி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் படி,  ”சுமார் 96% வெளி மாநில தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை என்பதும்  அத்துடன் சுமார் 90% வெளி மாநில தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.   இதில் பல மாநிலத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களிடம்  ரூ.200 கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது  இந்த நிலை உ பி மாநிலத்தில் அதிக அளவில் உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 100% வெளி மாநில தொழிலாளர்களுக்கு ரேஷன் அரசு  அளித்த ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை.  இதைப் போல் மகாராஷ்டிராவில் 99% மற்றும் கர்நாடகாவில் 93% பேருக்கும் ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை.  இதைப்போல்  சமைத்த உணவு, உபி மாநிலத்தில் 64%, கர்நாடகாவில் 805. மகாராஷ்டிராவில் 58%, டில்லி மற்றும் அரியானாவில் 66% வெளி மாநில தொழிலாளர்களுக்குக் கிடைக்கவில்லை.

இதில் பல வெளிமாநில தொழிலாளருக்கு  அளிக்கப்பட்ட ரேஷன் பொருட்கள் மிகவும் குறைவாக இருந்ததால் இரு தினங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.  இந்நிலையில் உ பி மாநிலத்தில் 100% பேரும், மகாராஷ்டிராவில் 90% பேரும் டில்லி மற்றும் அரியானாவில் 82% பேரும் உள்ளனர்.