கொரோனா ஒழிய  நாக்கை அறுத்து  காணிக்கை..

கொரோனா ஒழிய  நாக்கை அறுத்து  காணிக்கை..

மத்தியப்பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தைச் சேர்ந்த விவேக் சர்மா, என்ற சிற்பி இறை நம்பிக்கை மிகுந்தவர்.

குஜராத் மாநிலம் பன்ஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள நாடேஸ்வரி கிராமத்தில் ஒரு அம்மன் கோயிலில் அவர்  பணியாற்றி வந்தார்.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி இருப்பது குறித்து கவலைப் பட்ட விவேக்,  கொஞ்ச நாட்களாக விரக்தியில் இருந்து வந்தார்.

நேற்று அம்மன் கோயில் வாசலில்,திடீரென தனது நாக்கை அறுத்து, அம்மனுக்கு ரத்த காணிக்கை செய்துள்ளார், விவேக் சர்மா.

 தகவல் அறிந்த போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

’ஊரடங்கு நீங்கி மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும் என்பதால் அவர் நாக்கை அறுத்து, தியாகம் செய்துள்ளார்’’ என்று தெரிவித்தார், அந்த ஊரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள, எல்லை பாதுகாப்புப் படை வீரர் .

சம்பவம் பற்றி இதுவரை உறுதிப்படுத்தாத போலீசார் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

– ஏழுமலை வெங்கடேசன்