கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள்  உண்ண உணவின்றி, சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் கடுமையான சோதனைகளை சந்தித்து வருகின்றனர்.

ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி வரும் நிலையில் பலர் நடந்தும், சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனம் மூலமும் தங்களது சொந்த ஊர்களை நோக்கி பயணமாகி வருகிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி வழங்கியுள்ள மத்தியஅரசு, அதற்காக சில சிறப்பு ரயில்களையும் இயக்கி வருகிறது.
இந்த ரயில்களில் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய உணவுகள் வழங்கப்படாத நிலையில், அவர்களிடம் தேவையான அளவு பணமும் இல்லாததால், அடுத்த வேளை உணவுக்கே அல்லல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பீகார் ரயில் நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதை அறிந்த தன்னார் வலர் ஒருவர், பிஸ்கட் பாக்கெட்டுகளை எடுத்து வந்துசிலருக்கு கொடுக்க முயன்றபோது, அங்கு குவிந்த தொழிலாளர்கள், அவரிடம் இருந்து பிஸ்கட்டுகளை பறித்துச் செல்வதும், ஒருவருக்கொருவர் பிடுங்கி எடுத்துச்செல்லும் பரிதாபமும் காணப்படுகிறது.
இந்த பரிதாபகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..