புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதால், கட்டடத்தொழிலுக்கு பாதிப்பு …

சென்னை:

சென்னை,  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டால், கட்டிடத் தொழிலுக்கு பெரும் திண்டாட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொது செயலாளர் எம். பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து பன்னீர்செல்வம் கூறியதாவது:

கொரோனா வைரஸ் தடுப்பு பொது ஊரடங்கு உத்தரவால் கட்டடத் தொழிலாளர்கள், கொத்தனார், சித்தால் மற்றும் மேஸ்திரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிட்டதட்ட 28 லட்சம் கட்டடத் தொழிலாளர்கள் வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ளனர், அவர் மறுபதிவு செய்த  தொழிலாளர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 42 ஆயிரம் ஆகும். இவர்களுக்கு தான் அரசு நிவாரணம் தந்ததாக அறிவித்துள்ளது. இதிலும் பாதிப்பேருக்கு நிவாரணம் தரவில்லை. கட்டடத்தொழிலாளர்களில் மறுபதிவு செய்யாத அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் தர வேண்டும். மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அரசு வாரியத்தில் முறையாக பதிவு செய்யவில்லை.

முகாமில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் உணவும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கினார்கள், அதனால் பெரும்பாலோர் நடந்தே சொந்த ஊருக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள், இப்போது கட்டடத் தொழிலுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது, ஆனால் கட்டடத் தொழிலாளர்கள் கொரோனா பீதியால் தொழிலுக்கு வர அஞ்சுகிறார்கள்.

தற்போது பெரும்பாலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் சொந்த ஊருக்கு போய்விட்டார்கள், இனி வரும் காலத்தில் கட்டடத்தொழிலில் தொழிலாளர்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

You may have missed