மிஹீகா பஜாஜின் ப்ரி வெட்டிங் கொண்டாட்டம் , அதுவும் காஸ்ட்லியான மாஸ்க்குடன்…!

ராணா டகுபதியின் வருங்கால மனைவி மிஹீகா பஜாஜ் இன்ஸ்டாகிராமில் தனது அழகிய புகைபடங்களை பகிர்ந்ததுள்ளார்.

சமீபத்தில் நடிகர் ராணா டகுபதியுடன் நிச்சயம் செய்த மிஹீகா பஜாஜ், ஞாயிற்றுக்கிழமை தனது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களின் படங்களை தனது இன்ஸ்டாகிராமில்பகிர்ந்து கொண்டார். விழாவிற்கு மிகவும் நெருக்கமாக குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயந்தி ரெட்டியின் ஸ்டுடியோக்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட இளஞ்சிவப்பு மற்றும் புதினா-பச்சை லெஹெங்காவில் மிளிர்கிறார் மிஹீகா.

க்ரசலா நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார் .”ஜடாவ் மாலா போல்கிஸ் [வெட்டப்படாத வைரங்கள்], மாணிக்கங்கள் மற்றும் இளஞ்சிவப்பு டூர்மேலைன்கள் 18 கிலோ தங்கத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது .

அவரது பாரம்பரிய ஜாதவ் மாங் டிக்கா சிறப்பாக வெட்டப்பட்ட மாணிக்கங்கள் மற்றும் போல்கிஸுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஜாதாவ் குறிப்புகள் போல்கிஸ் மற்றும் சுற்று இளஞ்சிவப்பு டூர்மேலைன்களுடன் பதிக்கப்பட்டிருந்தன.

22 கேரட் தங்கத்தில் அமைக்கப்பட்ட போல்கிஸுடன் ஒரு ஜடாவ் காப்பு அழகாக கையில் உள்ளது,

ஒரு படத்தில் எம்பிராய்டரி டிசைனர் மாஸ்க் அணிந்திருந்தார் மிஹீகா. மிஹீகாவின் அலங்காரத்தை ஒப்பனை கலைஞர் தமன்னா ரூஸால் செய்திருந்தார் .

இதற்கிடையே ராணா தகுபதி திருமணம், ஐதராபாத்தில் உள்ள பிரமாண்ட பாலாக்ணுமா அரண்மனையில் (Falaknuma Palace) நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஐதராபாத்தில் உள்ள பிரமாண்ட அரண்மனைகளில் ஒன்று இது.