இதைவிட பெரிய வாழ்க்கையை கனவிலும் எண்ணவில்லை.. நடிகருக்கு நன்றி சொன்ன மனைவி..

பாகுபலி நடிகர் ராணா இனிமேல் கல்யாணமாகாத பிரமச்சாரி கிடையாது. அவர் காதலி மிஹீகாவை சமீபத்தில் ஐதராபாத் ராமாநாயுடு ஸ்டுடியோவில் நடந்த தடபுடலான திருணத்தில் முறைப் படி தாலி கட்டி மனைவியாக் கினார். பிறகு தனது திருமண படத்தை இணைய தளத்தில் வெளியிட்டார்.


இந்நிலையில் மிஹீகா கணவர் ராணாவுக்கு தனது அன்பை வெளிப்படுத்தி மெசேஜ் வெளியிட்டார். அதில்,’என் அன்பே, என் வாழ்கையே, என் இதயமே, என் ஆன்மாவே என எல்லாமுமாகவும் நீங்கள் இருப்பதற்கு நன்றி. இதைவிட பெரிய வாழ்கையை நான் என் கனவில் கூட கேட்டதில்லை. வாழ்கையில் என்னை சிறந்த நபராக உயர்த்தி இருக்கிறீர்கள். ஐ லவ் யூ.
இவ்வாறு கூறியிருக்கும் மிஹீகா கணவருடனும் தனது சகோதரருடனும் இருக்கும் புகைபடத்தை பகிர்ந்திருக்கிறார்.