வாஷிங்டன்: ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்க ஐநாவில் வலியுறுத்தப்படும் என்று அமெரிக்கா கூறி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஈரானின் போர் தளபதியான காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தி கொன்றது. பின்னர் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தை ஈரான் ராணுவம் தாக்கியது.

இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் அமெரிக்காவில் நவம்பர் 3ம தேதி நடக்கும் அதிபர் தேர்தலுக்கு முன்பாக, தென் ஆப்பிரிக்காவுக்கான அமெரிக்க தூதரை கொல்ல ஈரான் திட்டமிட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் கூறின.

தாக்குததல் நடந்தால் ஆயிரம் மடங்கு பதிலடி தரப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந் நிலையில் ஈரான் மீது மீண்டும் புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படும்  என்று எச்சரித்துள்ளது.

இது குறித்து   அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறி இருப்பதாவது: ஈரான் மீது பொருளாதார தடைகளை அடுத்த வாரம் ஐநா சபையில் அமல்படுத்தும். தடைகளை விதிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்யும் என்று தெரிவித்துள்ளார்.