மிலாதுநபியா சுதந்திரதினமா?: தள்ளாடும் டாஸ்மாக் அதிகாரிகள்!

குடித்தால் மூளை குழம்பும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இப்படி குழம்பக் காரணமாக இருக்கும் டாஸ்மாக் அதிகாரிகளே குழம்பிப்போயிருக்கிறார்கள்!

வரும் 21 11 2018 அன்று மிலாதுநபி. அன்று, மதுக்கடைகளுக்கு விடுமுறை. இதை அறிவிக்கும் டாஸ்மாக் அறிவிப்பில் (தலைப்பில்) சுதந்திரதினம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

“எவ்வளவுதான் நிதானம் அடிச்சாலும், சாராயம் தவறமாட்டேன்!”என்றானாம் ஒரு குடிகாரன். அதுதான் நினைவுக்கு வருகிறது.

வேறு என்னத்தச் சொல்லவது?