லக்னோ.

ஸ்லாமியர்களின் பண்டிகையான ‘மீலாது நபி’க்கு  நாடு முழுவதும் விடுமுறை விடப்படுவது வழக்கம்.

ஆனால், நடைபெற்று முடிந்த உ.பி. சட்டமன்ற தேர்தலில் பாரதியஜனதா ஆட்சியை பிடித்தது. அதைத்தொடர்ந்து முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார்.

வழக்கமாக விடுமுறை விடப்பட்டு வந்த  15 விடுமுறை நாட்களை நீக்கி உத்தரவிட்டார். அதில் நபிகள் நாயகம் பிறந்த தினமான மீலாது நபி விடுமுறையும் ஒன்றாகும்

இதை எதிர்த்து அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விளக்கம் கேட்டு உ.பி. அரசு நோட்டீஸ் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பஷீர் பெக் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மீலாது நபி விடுமுறை ரத்தை எதிர்த்து  வழக்கு தொடர்ந்து  மனுவை விசாரித்த நீதிமன்றம் 15 விடுமுறை நாட்களை நீக்கியது குறித்த விவரம் அடங்கிய பட்டியலை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உ.பி. அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

மேலும் வழக்கை ஜூலை 12 ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.