மணிப்பூரில் லேசான நிலநடுக்கம்

இம்பால்:

மணிப்பூரில் உள்ள இந்திய-மியான்மர் எல்லையில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகினது.

மாலை 4.37 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்தவெளியில் தஞ்சமடைந்தனர். இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழு விபரம் இன்னும் வெளியாகவில்லை.