வெனிசுலா : நில நடுக்கத்தால் வீடுகள் குலுங்கின

சாண்டியாகோ, வெனிசுலா

வெனிசுலாவில் இன்று மதியம் மிதமான நில நடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெனிசுலாவில் உள்ள சாண்டியாகோ நகரில் இருந்து சுமார் 4 கிமீ தூரத்தில் கோபோவோ என்னும் பகுதி உள்ளது.

இன்று மதியம் சுமார் 2.28 மணிக்கு அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 10 கிமீ எனவும் ரிக்டர் அளவில் இது 5.6 ஆக பதிவாகி உள்ளதாகவும் அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் சுமார் 5 வினாடிகள் நிலவியதால் வீடுகள் குலுங்கியதாக கூறப்படுகிறது.

அச்சம் கொண்ட  மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் நின்றுள்ளனர்.

இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து எவ்வித தகவலும் இதுவரை வரவில்லை.