செங்கல்பட்டில் இன்று லேசான நிலநடுக்கம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே மஹேந்திரா சிட்டியில் இன்று மாலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.
இதனால் பீதியடைந்த மக்கள் அலுவலகம், கட்டடங்களில் இருந்தவர்கள் சாலைகளில் குவிந்தனர்.
தொடர்ந்து மென்பொருள் நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது