டெல்லி-நொய்டா மற்றும் அதன் அருகாமைப் பகுதியில், ஞாயிறு மதியம் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் மிக லேசானது என்பதால், இதனால் ஏதும் சேதம் ஏற்பட்டதா என்ற விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்திலிருந்து வெளிவரும் தகவலின்படி, இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.5 என்று பதிவானதாக கூறப்படுகிறது.
இந்த அதிர்வுக்கு முன்னதாக, டெல்லி-நொய்டா பகுதிகளில் வீசிய வலிமையான காற்று, அப்பகுதியின் வெப்பநிலையைக் குறைத்ததாகவும், அதனையடுத்து, லேசான தூரல் விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரத்தில், சீனாவின் அக்சூ பகுதிக்கு அருகே, 5.3 என்ற அளவில் பதிவான ஒரு நிலநடுக்கும் ஏற்பட்டதாக, அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.