கடந்த வாரம் தொடங்கப்பட்ட Pfizer நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் பங்கேற்ற பங்கேற்பாளர்களுக்கு லேசானது முதல் மிதமானது வரையிலான பக்க விளைவுகள் ஏற்பட்டதாக நிறுவனம் அறிவித்துள்ளது.  சோர்வு, தலைவலி, குளிர் மற்றும் தசை வலி ஆகியவை இவற்றில் அடங்கும் என இந்நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு வழங்கிய விளக்கத்தில் தெரிவித்துள்ளது. சோதனையில் பங்கேற்ற சிலருக்கு காய்ச்சல் உண்டாகியுள்ளது. ஆனால் கிடைத்துள்ள தரவுகள் தெளிவாக இல்லை. தடுப்பு மருந்து அல்லது ஒப்பீட்டு போலி மருந்து வழங்கப்பட்டது யாருக்கு தரப்பட்டது என்ற தரவு இதில் தெளிவாக இல்லை. ஃபைசரின் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவரான கேத்ரின் ஜான்சன், சுயாதீன தரவு கண்காணிப்புக் குழு “அவர்கள் தெளிவில்லாத தரவைக் கொண்டுள்ளனர். நோயாளிகளுக்கு ஏதேனும் பாதுகாப்பைப் பற்றிய பாதுகாப்பு கவலைகள் இருந்தால் அவை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஆனால், இன்று வரை அவ்வாறு செய்யவில்லை” என்று வலியுறுத்தினார்.

ஜெர்மன் கூட்டாளர் பயோஎன்டெக் உடன் இணைந்து உருவாக்கும் சோதனைக்குரிய COVID-19 தடுப்பு மருந்தைச் சோதிக்க, நிறுவனம் தனது 44,000 தன்னார்வளர்களுடன் மேற்கொள்ளும் சோதனையில் 29,000 க்கும் மேற்பட்டவர்களை சேர்த்துள்ளது. இதில், 12,000 க்கும் மேற்பட்ட  பங்கேற்பாளர்கள் தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் பெற்றுள்ளனர் என்று முதலீட்டாளர் மாநாட்டு அழைப்பில் ஃபைசர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு அஸ்ட்ராஜெனிகா -ஆக்ஸ்போர்ட் நிறுவன தடுப்பு மருந்தின் சோதனைகள் இதே காரணத்திற்காக நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. அக்டோபரில் தடுப்பு மருந்துகள் முறையாக செயல்படுகிறதா என்பது குறித்த முடிவுகள் கிடைக்கும் என்று ஃபைசர் நிறுவனம் எதிர்பார்க்கிறது.

“சரியான முடிவுகள் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் – தடுப்பூசி செயல்திறன் 60% அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும்” என்று ஃபைசரின் தலைமை அறிவியல் அதிகாரி மைக்கேல் டால்ஸ்டன் கூறினார்.