பா.ஜ. கட்சிக்கு வாக்களிக்க மிரட்டும் ஆயுதம் தாங்கிய அமைப்பு

குவஹாத்தி: மணிப்பூரில் செயல்பட்டுவரும் குகி தேசிய ராணுவம் என்றதொரு அமைப்பு, பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பதை உறுதிசெய்ய வேண்டுமென கிராம தலைவர்களை மிரட்டியுள்ளது.

தாங்கள் பொறுப்பு வகிக்கும் கிராமங்களில், 90% வாக்குகள் பாரதீய ஜனதா கட்சிக்கு வந்துசேரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரின் முவன்னோபாய் கிராமத்தில் திரண்டிருந்த கிராம தலைவர்களின் கூட்டத்தில் பேசிய தாங்போய் ஹயோகிப் என்ற குகி தேசிய ராணுவத்தின் கமாண்டர் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தார்.

வெளிப்புற மணிப்பூர் தொகுதியில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர் பென்ஜமின் மேட்டிற்கு ஆதரவாக அவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளர்.

கடந்த 1988ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆயுதந்தாங்கிய அமைப்பில், தற்போதைய நிலையில் 600 உறுப்பினர்கள் வரை இருப்பதாக கூறப்படுகிறது.

– மதுரை மாயாண்டி

Leave a Reply

Your email address will not be published.