காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் தீவரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் ஒரு தீவரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். தொடர்ந்து அங்கு ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.