காஷ்மீர் : தீவிரவாத தாக்குதலில் 4 போலீசார் பலி

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 4 போலிசாரைக் கொன்று அவர்கள் ஆயுதங்களை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

                                       மாதிரி புகைப்படம்

காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சோபியான் மாவட்டத்தில் அரஹாமா என்னும் இடத்தில் ஒரு காவல் நிலையம் அமைந்துள்ளது.    இங்கு ரோந்து சென்ற காவல்துறை வாகனம் திடீரென பழுது அடைந்துள்ளது.   அந்த வாகனத்தை பழுது பார்க்க அதில் சென்ற காவலர்கள் முயன்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் கும்பல் இவர்களை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.  இந்த தாக்குதலில் முகமது இக்பால், ஜாவுத் அகமது, அதில் அகமது,மற்றும் இஷ்பாக் அகமது ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்து அங்கேயே மரணம் அடைந்துள்ளனர்.

மரணம் அடைந்த காவலர்களிடம் இருந்த 3 துப்பாக்கிகளை   தீவிரவாதிகள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.    ஆயுதங்களை கொள்ளை அடித்த தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

You may have missed