எகிப்தில் ராணுவம் குண்டு வீச்சு: 100 பயங்கரவாதிகள் பலி!

சினாய்,

கிப்தில் பயங்கரவாதிகளுக்கு எதிராக  ராணுவம் நடத்திய குண்டு வீச்சில் 100 பயங்கரவாதிகள் பலியாகியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

எகிப்தில் சினாய் தீபகற்ப பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது. எனவே, அவர்களை ஒழிக்க ராணுவம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று வடக்கு சினாஸ் தீபகற்ப பகுதியில் ரபா, ஷேக் ஷூவையத் மற்றும் அல்-அரீஷ் ஆகிய பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ராணுவ போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.

அதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பலியாகினர். 40 பேர் காயம் அடைந்தனர்.  துறைமுகம் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து குடோன்களும் குண்டு வீச்சில் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்த தகவலை எகிப்து ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோதனைச்சாவடியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தினார்கள். அதில் 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அதற்கு பழிவாங்க இத்தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலானது தொடர்ந்து வருகிறது என்றும் தெரியவந்து உள்ளது.

இந்த தகவலை அல்ஜசிரா டிவி  உறுதிபடுத்தி உள்ளது.