கோவா,
ந்திய ராணுவம் எதிரிகளுக்கு பாடம் கற்பிக்க ஆர்வமாக உள்ளது என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் பாரிக்கர் கூறினார்.
தாக்குதல் நடத்துவதற்கு மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது என்று மேலும் கூறினார்.
கோவில்அடுத்த ஆண்டு  நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி இப்போதிலிருந்தே பிரசாரம் நடைபெற்று வருகிறது.
கோவாவின் வாஸ்கோவில் நடைபெற்ற பாரதிய ஜனதா பொதுக்கூட்டத்தில்  கலந்துகொண்ட மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசியதாவது:
”இந்திய ராணுவத்தின் மன உறுதியானது உயர்ந்து உள்ளது. நம்முடைய எதிரிகளுக்கு பாடம் கற்பிக்க ராணுவம் விரும்புகிறது. அவர்கள் மத்திய அரசிடம் இருந்து அனுமதியை பெறுவதற்கு மட்டுமே காத்திருக்கிறார்கள்… நாங்கள்  அவர்களுக்கு இரண்டு – மூன்று முறை அனுமதி வழங்கி உள்ளோம்,” என்றார்.
indian-milirtary
இந்திய எல்லை அருகே, பாகிஸ்தான் திடீர் போர் பயிற்சியில் ஈடுபட்டதை தொடர்ந்து மனோகர் பாரிக்கரிடம் இருந்து இதுபோன்ற கருத்தானது வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் போர் பயிற்சியானது அந்நாட்டு பிரதமர் நவாஸ் செரீப் தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய நவாஸ் செரீப், ”நமது நாட்டின் பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள  நாம் தயார் நிலையில் இருப்பதை பிரதிபலிக்கிற வகையில்தான் இந்தப் பயிற்சி நடந்து முடிந்துள்ளது,” என்று கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்தே, இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர்  மனோகர் பாரிக்கர் பேசுகையில், “நம்முடைய எதிரிகளுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம், இந்தியாவை நோக்கி முறைத்தால், நாம்மாலும் கண்களை பெரிதாக்கி முறைக்க முடியும் ,” என்றார்.
இந்தியாவின் எல்லைகள் எல்லாம் பாதுகாப்பாக உள்ளது என்ற மனோகர் பாரிக்கர், இந்தியாவை தாக்க யாருக்கும் தைரியம் கிடையாது என்று கூறினார்.
தேச பாதுகாப்பு விவகாரத்தில் எங்களை முற்றிலுமாக அர்பணித்து உள்ளோம், நம்முடைய எல்லையை வலுப்படுத்துவது மட்டுமின்றி,  ராணுவ வீரர்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் வாங்கி கொடுக்கப்படுகிறது,” என்றார் மனோகர் பாரிக்கர்.