ஓபிஎஸ் சகோதரர் சிகிச்சைக்கு ராணுவ ஹெலிகாப்டர்: இந்திய விமானப்படைக்கு ரூ.14.91 லட்சம் செலுத்திய ஓபிஎஸ்

சென்னை:

பிஎஸ் சகோதரர் சிகிச்சைக்காக  ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்திய விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதற்கான பணம் ரூ. ரூ.14.91 லட்சத்தை இந்திய விமானப்படைக்கு துணைமுதல்வர் ஓபிஎஸ் செலுத்தி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஓபிஎஸ் சகோதரர் உடல்நலம் இல்லாமல் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவசரம் கருத்தி, மதுரை மருத்துவமனையில் இருந்து சென்னை மருத்துவ மனைக்கு அழைத்து வர ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது. மேலும், இந்த விஷயத்தில் ஓபிஎஸ்சுக்கு உதவி செய்ததாக மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ஹெலிகாப்டர் உபயோகத்துக்கான பணம் தமிழக அரசு மூலம் ஓபிஎஸ் இந்தய விமானப்படைக்கு செலுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி பாலமுருகன் மதுரையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்தால் கூடுதல் நேரம் ஆகும் என்பதால், விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை தொடர்பு கொண்டு அவசரமாக ராணுவ அமைச்சகத்துக்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் விமானத்துக்கு ஏற்பாடு செய்து தாருங்கள் என்று கோரிக்கை வைத்தார் ஓபிஎஸ். இதை ஏற்றுக்கொண்ட நிர்மலா சீதாராமனும், உடனடியாக சிறப்பு ராணுவ ஆம்புலன்ஸ் விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் மதுரையில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். முதல்வர் அல்லது கேபினட் அந்தஸ்தில் உள்ள ஒருவருக்குதான் ராணுவத்தின் ஏர் ஆம்புலன்ஸ் வசதி முறையான நடவடிக்கைகளுக்கு பிறகு வழங்கப்படும்.

ஆனால் ஒரு தனிப்பட்ட, கேபினட் அந்தஸ்த்து உள்பட எதுவும் இல்லாத நபருக்கு வழங்க இந்திய ராணுவத்தில் இடமில்லை. அதையும் மீறி தன் சொந்த செல்வாக்கில் மிகவும் ரகசியமாக நிர்மலா சீதாராமன் செய்து இருந்தார்.

இந்த சம்பவம், ஓபிஎஸ்சை நிர்மலா சீத்தாராமன் சந்திக்க மறுத்த நிலையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நிர்மலா சீத்தாராமன் பதவி விலக வேண்டும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியது குறிப்பிடத்தக்கது.